கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் இலங்கை வந்து சேர்ந்தன
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
ஞாயிறு, ஆகத்து 19, 2012
இந்தியாவில் உள்ள பௌத்தர்களின் புனிதத் தலமான கபிலவஸ்துவில் புத்தரின் புனித சின்னங்கள் சில இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. கொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில், அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச இப்புனிதச் சின்னங்களை இந்திய கலாசார அமைச்சர் குமாரி சேல்யாவிடம் இருந்து பொறுப்பேற்றார்.
களனி மானல்வத்த விகாரைக்கு இச்சின்னங்கள் கொண்டு செல்லப்பட்டு செப்டெம்பர் 4 ஆம் திகதிவரை அங்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். 1978 ஆம் ஆண்டில் இந்தப் புனிதச் சின்னங்கள் இலங்கைக்கு முதன் முறையாகக் கொண்டு வரப்பட்டிருந்தன. பின்னர்
மொங்கோலியாவில் 1993 இலும், சிங்கப்பூரில் 1994 இலும், தென்கொரியாவில் 1995 இலும், தாய்லாந்தில் 1996 இலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. தற்பொது மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இலங்கைக்கு இவை கொண்டுவரப்பட்டுள்ளன.
கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் என அழைக்கப்படும் இச்சின்னங்கள் பீகார் மாநிலத்திலுள்ள புராதன கபிலவஸ்து நகரம் என கருதப்படும் பகுதியில் பிப்பிராவா என்ற இடத்தில் 1898 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.
மூலம்
[தொகு]- Kapilavastu relics arrive in Sri Lanka, த இந்து, ஆகத்து 19, 2012
- Sacred Kapilavastu relics arrives in Sri Lanka, கொலம்பு பேஜ், ஆகத்து 19, 2012