காசாவில் இசுரேல் நடத்திய வான் தாக்குதலில் 12 பாலத்தீனியர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 10, 2012

காசாவில் இடம்பெற்ற இசுரேலிய வான் தாக்குதல் ஒன்றில் மூத்த போராளித் தலைவர் உட்பட 12 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.


சொகைர் அல்-காய்சி என்பவர் இசுரேலின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும், அதனாலேயே அவர் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக இசுரேல் தெரிவித்திருக்கிறது. பல ராக்கெட் தாக்குதல்கள் இசுரேல் நோக்கி நடத்தப்பட்டதாகவும் அந்நாட்டு கூறியுள்ளது. இசுலாமிய ஜிகாட் குழு தமது போராளிகளில் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது. போராளிகளின் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 4 பேர் காயமடைந்தனர் என இசுரேலியப் பேச்சாளர் தெரிவித்தார்.


கடந்த பல மாதங்களுக்குப் பின்னர் காசாவில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும் எனச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இசுரேலியர்களின் தாக்குதலுக்கு தாம் பதிலடி கொடுப்போம் என பிஆர்சி என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.


மூலம்[தொகு]