உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேக்க கடன் காரணமாக அமெரிக்க பங்குசந்தையில் பெரும் சரிவு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 7, 2010

ஐரோப்பிய ஒன்றிய நாடான கிரேக்கத்தின் கடன் சிக்கல் காரணமாகவும் கணினி செயல்படுத்திய வணிகம் காரணமாகவும் நேற்று அமெரிக்க பங்குசந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் டோ ஜோன்ஸ் குறியீடு 9% க்கும் மேல் குறைந்தது. இது 1987 அடுத்து ஏற்பட்ட பெரும் சரிவாகும்.


இன்றைய பங்குச்சந்தை முடிவில் டோ ஜோன்ஸ் குறியீடு 3.20 %ம், நாஸ்டாக் 3.44‌%ம் எஸ்&பி குறியீடு 3.24%ம் குறைந்திருந்தன.


கடும் கடன் சிக்கலில் இருக்கும் கிரேக்கத்துக்கு அனைத்துலக நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வங்கி கடன் கொடுத்து உதவ முன்வந்துள்ளன. ஆனால் கிரேக்கம் ஊதிய குறைப்பு, ஓய்வூதியம் குறைப்பு, அதிக வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளன. இதன் காரணமாக கிரேக்கத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


கடனை திருப்பித்தர முடியாமல் கிரேக்கம் திவாலாகலாம் எனவும் இது போன்ற நிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல் போன்றவற்றிக்கும் வரலாம் என பங்குச்சந்தையில் அச்சம் பரவியுள்ளது.


ஐரோப்பிய நடுவண் வங்கியானது கிரேக்க கடன் பத்திரங்கள் வாங்கல் போன்ற புது முயற்சிகள் எடுத்து கிரேக்க கடன் சிக்கல் தீர முயவில்லை எனவும் முதலீட்டாளர்கள் கவலை கொண்டுள்ளார்கள்.


வால் தெருவின் பெரிய வங்கி ஒன்று தவறுதலாக செய்த வணிகத்தினால் இந்த சரிவு ஏற்பட்டதாக வதந்தி உலவுகிறது.


மூலம்

[தொகு]