உள்ளடக்கத்துக்குச் செல்

குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தின் 28வது உறுப்பு நாடாகியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 1, 2013

குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தின் 28வது உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டதை அடுத்து தலைநகர் சாகிரெபில் மக்கள் பெருமளவு கூடி தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகள் குரோவாசிய எல்லைகளில் பறக்க விடப்பட்டன.


ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் சுங்கத்துறையினர் தமது பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என குரோவாசிய அரசுத்தலைவர் ஐவோ ஜொசிப்போவிச் கூறினார். ஆயினும், பல ஆண்டுகாலமாக நாட்டில் நிலவி வந்த பொருளாதார மந்தநிலை காரணமாக பெருமளவு மக்கள் இந்நிகழ்வைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


குரோவாசியா விடுதலைப் போர் நடத்தி யூகோசுலாவியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. குரோவாசியா 10 ஆண்டுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்திருந்தது.


யூகோசுலாவியாவின் மற்றும் ஒரு முன்னாள் குடியரசு சுலோவீனியா ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]