குவாத்தமாலாவில் பக்காயா எரிமலை வெடித்தது, ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் நிலை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 4, 2014

வட அமெரிக்காவின் குவாத்தமாலாவில் பக்காயா என்ற எரிமலை வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் 3,000 பேர் வரையில் அப்பகுதிய விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


1976 பக்காயா எரிமலை வெடிப்பு.

சென்ற சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரும் வெடிப்பை அருத்து பக்காயா எரிமலை தூசுகளையும், எரிமலைக் குழம்புகளையும் வெளியேற்ற ஆரம்பித்திருந்தது. ஞாயிறன்றும் புதிய வெடிப்புகள் அவதானிக்கப்பட்டன. 4 கிமீ உயரத்திற்கு தூசுகள் கிளம்பின.


பக்காயா எரிமலைப் பகுதி தலைநகர் குவாத்தமாலா நகரில் இருந்து தெற்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விமான சேவைகள் இப்பகுதியில் இருந்து வேறு திசைகளுக்கு மாற்றப்பட்டன.


நடு அமெரிக்கப் பகுதியில் உயிர்ப்புடன் உள்ள மூன்று எரிமலைகளில் பக்காயாவும் ஒன்றாகும். ஏனையவை பியூகோ, சான்டா மரியா என்பவையாகும்.


பக்காயா எரிமலை கடைசியாக சனவரி 2000 இலும், மே 2010 இலும் வெடித்திருந்தது.


மூலம்[தொகு]