உள்ளடக்கத்துக்குச் செல்

கூகுள் நிறுவனத்தின் ஆள் இல்லாமல் இயங்கும் வாகனம் விபத்துக்குள்ளானது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 2, 2016

அமெரிக்க நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் தேடுபொறி இயங்கு தள நிறுவனத்தின் கண்டுபிடிப்பான ஆள் இல்லா இயங்கு வாகனம் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மவுன்ட் ஹில் பகுதியில் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் திகதி அன்று 23 வாகனங்களை சோதனை ஓட்டத்தில் இந்த நிறுவனம் ஈடுபடுத்தியது. 2015 ஆம் ஆண்டு ஜூலை துவங்கி இதுவரை 14 முறை இந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதே போல் கூகுளின் லூம் திட்டம் என்ற இணைய தள சேவை திட்டத்திற்காக இலங்கையில் பறக்கவிடப்பட்ட மூன்று பலூன்களில் ஒன்று 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் திகதி அன்று வான்வெளியில் வெடித்து சிதறியது.



மூலம்

[தொகு]