கென்யாவில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
- 2 ஏப்பிரல் 2015: கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி
- 14 சூன் 2014: ஆப்பிரிக்கக் காடுகளில் 2013ஆம் ஆண்டில் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன
- 23 செப்டெம்பர் 2013: நைரோபி வணிக வளாகத் தாக்குதல், 69 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர்
- 11 செப்டெம்பர் 2013: கென்யாவின் வறண்ட துர்க்கானா பகுதியில் நீர்த்தேக்கம் கண்டுபிடிப்பு
- 7 ஆகத்து 2013: பெரும் தீயை அடுத்து நைரோபி விமான நிலையம் மூடப்பட்டது
திங்கள், செப்டெம்பர் 12, 2011
கென்யத் தலைநகர் நைரோபியில் பெட்ரோலிய எரிவாயுக் குழாய் ஒன்று இன்று திங்கட்கிழமை வெடித்துத் தீப்பற்றியதில் நூற்றுக்கும் அதிகமானோர் தீயில் கருகி மாண்டனர்.
தலைநகரின் லுங்கா லுங்கா என்ற தொழிற்சாலைப் பகுதியில் இவ்வெடிப்பு இடம்பெற்றுள்ளது. தீ அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் அப்பகுதியை மூடியுள்ளனர். தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். எண்பதிற்கும் அதிகமானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் எரிவாயுக் குழாய் நைரோபியின் மத்திய பகுதியில் இருந்து பன்னாட்டு விமான நிலையம் வரை குடியிருப்புப் பகுதிகளூடாகச் செல்கிறது.
பல உடல்கள் தீயில் கருகி அடையாளம் தெரியாமல் எலும்புத் துண்டுகளுடன் ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்ததாக பிபிசியின் நைரோபிச் செய்தியாளர் தெரிவிக்கிறார். அருகில் இருந்த ஆறு ஒன்றிலும் இறந்த உடல்கள் மித்ந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக பெட்ரோல் குழாயில் சிறு வெடிப்பு ஒன்று ஏற்பட்டதை அடுத்துக் கசிந்த பெட்ரோலை மக்கள் சேகரிக்க ஆரம்பித்ததாகவும், சிறிது நேரத்தின் பின்னர் பெரும் வெடிப்புக் கேட்டதாகவும் நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
2009 ஆம் ஆண்டில் மேற்கு கென்யாவில் இதே போன்று இடம்பெற்ற எரிவாயுக் குழாய் விபத்து ஒன்றில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
மூலம்
[தொகு]- Kenya fire: Nairobi pipeline blaze 'kills 100', பிபிசி, செப்டம்பர் 12, 2011
- 'Scores dead' in Kenyan pipeline fire, அல்ஜசீரா, செப்டம்பர் 12, 2011