கென்யாவில் கிறித்தவக் கோயில் பாடசாலை மீது தாக்குதல்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள கிறித்தவக் கோயில் ஒன்றில் ஞாயிறுப் பாடசாலை மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர் என செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.


சோமாலியாவின் அல்-சபாப் தீவிரவாதிகளின் ஆதரவாளர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற நெரிசலில் சிக்கியே பல சிறுவர்கள் காயமடைந்தனர் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். இத்தாக்குதலின் பின்னர் அருகில் உள்ள அலாபின் மசூதி சில இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளானது.


ஆப்பிரிக்க ஒன்றியப் படையினருடன் இணைந்து கென்யாப் படையினர் இவ்வார ஆரம்பத்தில் சோமாலியாவின் கிஸ்மாயோ நகரில் இருந்து அல்-சபாப் போராளிகளை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.மூலம்[தொகு]

Bookmark-new.svg