உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கோவில் சுரங்க விபத்து, 60 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 16, 2012

கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 60 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


ஓரியன்டல் மாகாணத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் சுமார் 100 மீட்டர் ஆழ தங்கச் சுரங்கமே இடிந்து வீழ்ந்துள்ளது. தலைநகர் மம்பாசாவில் இருந்து 120 கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள பங்கோய் என்ற நகரில் இவ்விபத்து நிகழ்ந்தது. இந்தச் சுரங்கம் காட்டுப் பகுதியில் உள்ளதாலும், அங்கு போராளிகளின் நடவடிக்கை அதிகமிருப்பதாலும் மீட்புப் பணியாளர்கள் சுரங்கத்தை அடைவதில் தாமதமேற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சுரங்கத்தில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் சட்டவிரோதமாகப் பணியாற்றுபவர்கள் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இவ்வாறான சட்டவிரோத தங்கச் சுரங்கங்களில் இருந்து பெறப்படும் வருமானத்தின் பெரும் பகுதி கொங்கோவில் இனமோதல்களில் ஈடுபட்டு வரும் போராளிகளையே சென்றடைவதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.


மூலம்

[தொகு]