உள்ளடக்கத்துக்குச் செல்

சப்பானில் 7.3 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை எச்சரிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 7, 2012

சப்பானின் கிகக்குக் கரைக்கப்பால் இன்று 7.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சிறிய அளவு ஆழிப்பேரலை ஏற்பட்டது. கமியாசி நகரில் இருந்து 245 கிமீ தூரத்தில் 36 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


பசிபிக் பெருங்கடலின் ஏனைய பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை இன்று உள்ளூர் நேரம் 19:20 மணிக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ, பெரும் சேதங்களோ ஏற்படவில்லை.


2011 மார்ச் 11 ஆம் நாள் சப்பானைத் தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் , மற்றும் ஆழிப்பேரலையால் 15,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 3,200 பேர் வரையில் காணாமல் போயினர்.


மூலம்

[தொகு]