சாம்சங் குழும அதிபர் ஊழல் குற்றச்சாட்டில் கைதானார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 17, 2017

சாம்சங் குழும அதிபர் சே-ஒய்-லீ ஊழல் குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை கைதானார். இவர் சாம்சங் குழுமத்தை நடத்தும் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவர்.


தென் கொரிய அதிபர் பார்க் குயுன் கு நாடாளுமன்றத்தால் குற்றப்பழிச்சாட்டுக்கு ஆளான ஊழலில் இவர் பங்கும் இருந்ததால் கைது செய்யப்பட்டார். பார்க் நடத்தும் அமைப்புகளுக்கு சாம்சங் குழுமத்தில் தான் தலைமை பதவிக்கு வர அரசின் உதவி வேண்டி பணம் கொடுத்தார் என்பது அரசு தரப்பு குற்றச்சாட்டு.


சாம்சங் குழும அதிபர் தனி அறையில் சியோலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரின் வழக்கறிஞர்கள் கைது தொடர்பாக ஏதும் சொல்ல மறுத்துவிட்டனர்.


இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர் மண முறிவு பெற்றவர். மற்ற சிறைக்கைதிகளுக்கு இல்லாத வகையில் இவருக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


இவரின் கைதால் சாம்சங் நிறுவனத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை சே-ஒய்-லீயின் நம்பைக்கு உரிய அறிவுரையாளரும், குருவுமான இச்சோய்-கீ-சங் குழுமத்தை ஏற்று நடத்துகிறார்.

மூலம்[தொகு]