தென்கொரிய அமெரிக்கத் தூதுவர் மீது கத்திக் குத்து

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 6, 2015

தென் கொரியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் மார்ட் லிப்பேர்ட் தலைநகர் சியோலில் நபரொருவரின் கத்திக் குத்துக்கு இலக்கானார். காலை விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது இச்சம்பவம் நடைபெற்றது.

தாக்குதல் நடத்தியவர் 55 வயது நிரம்பிய கிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். "வடகொரியாவும் தென் கொரியாவும் இணைக்கப்பட வேண்டும்" எனக் கூச்சலிட்டவாறு கத்தியுடன் லிப்பேர்டை நெருங்கி வந்ததாகவும், போர்ப் பயிற்சிக்கு இடமில்லை எனக் கூறியவாறு தாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிசார் கிம்மை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.



மூலம்[தொகு]