சீனாவில் இனக்கலவரத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 10, 2009



சீனாவின் சின்சியாங் மாகாணத்தின் தலைநகரான உருமுச்சியில் கடந்த ஜூலை மாதம் இடம் பெற்ற இனக்கலவரங்கள் தொடர்பில் அங்கு ஒன்பது பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


அந்தப் பகுதியில் அப்போது இடம் பெற்ற வன்முறையில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட ஒன்பது ஆண்களுக்கு கடந்த சில நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சீன அரசுக்கு சொந்தமான சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


குவாங்டொங் மாகாணம்

அந்தப் பகுதியின் மாகாண அரசின் பேச்சாளர், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார்.


கடந்த ஜூலை மாதம் 5 ஆம் நாள் உருமுச்சியில் உள்ளூர் பழங்குடியினரான உய்கூர் மற்றும் ஆன் சீன சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.


குறைந்தது 21 பேர் இந்தக் கலவரத்துடன் தொடர்புள்ளவர்களாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீது கொலை, கொள்ளை, மற்றும் பொருட்சேதம் ஆகுய குற்றங்கள் சுமத்தப்பட்டன. இவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்