சீனாவில் இனக்கலவரத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
செவ்வாய், நவம்பர் 10, 2009
- 7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 16 திசம்பர் 2016: அமெரிக்காவின் ஆளில்லா இயக்க நீர்மூழ்கியை தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றியது
- 13 அக்டோபர் 2016: சீனா: 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
- 2 சூன் 2015: சீனாவில் யாங்சி ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில் 456 பேர் மூழ்கினர்
- 9 ஏப்பிரல் 2015: தைவான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
சீனாவின் சின்சியாங் மாகாணத்தின் தலைநகரான உருமுச்சியில் கடந்த ஜூலை மாதம் இடம் பெற்ற இனக்கலவரங்கள் தொடர்பில் அங்கு ஒன்பது பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் அப்போது இடம் பெற்ற வன்முறையில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட ஒன்பது ஆண்களுக்கு கடந்த சில நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சீன அரசுக்கு சொந்தமான சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தப் பகுதியின் மாகாண அரசின் பேச்சாளர், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 5 ஆம் நாள் உருமுச்சியில் உள்ளூர் பழங்குடியினரான உய்கூர் மற்றும் ஆன் சீன சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.
குறைந்தது 21 பேர் இந்தக் கலவரத்துடன் தொடர்புள்ளவர்களாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீது கொலை, கொள்ளை, மற்றும் பொருட்சேதம் ஆகுய குற்றங்கள் சுமத்தப்பட்டன. இவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- "சீனாவில் ஜூலை கலவரத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு மரண தண்டனை". விக்கிசெய்திகள், அக்டோபர் 13, 2009
- "சீனாவின் சின்சியாங்கில் கலவரம் நீடிக்கிறது". விக்கிசெய்திகள், ஜூலை 8, 2009
மூலம்
[தொகு]- China Executes Nine Ethnic Uighurs in July Unrest, வொயிஸ் ஒஃப் அமெரிக்கா, நவம்பர் 9, 2009
- China Executes 9 for Role in Ethnic Riots, நியூயார்க் டைம்ஸ், நவம்பர் 9, 2009
- Nine executed over Xinjiang riots, பிபிசி, நவம்பர் 9, 2009