உள்ளடக்கத்துக்குச் செல்

சீன வானில் மூன்று சூரியன்கள்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 4, 2013

சீனாவின் வடக்கே உள்ள உள் மங்கோலியா சுயாட்சி பகுதியில் மூன்று சூரியன்கள் தோன்றிய அற்புத வானியல் நிகழ்வை அங்குள்ள மக்கள் கண்டு களித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணியளவில் வானில் சூரியனுடன் உடன் பிறப்புகளான இரட்டை சிறிய சூரியன்கள் திடீரென்று உருவாகின. இவை மூன்றும் வானவில் போன்ற ஒளி வட்டத்தால் சூழப்பட்டது போல் காணப்பட்டன.


சீப்பெங் நகரில் தோன்றிய இந்த நிகழ்ச்சி வானில் இரண்டு மணி நேரம் நீடித்தது. பலர் இந்நிகழ்வைத் தமது காணொளிக் கருவிகளில் பதிவு செய்து கொண்டனர். சில பகுதிகளில் ஐந்து சூரியன்கள் தோன்றியதாகவும் சிலர் கூறினர்.


இது ஒரு அறிவியல் விண்வெளி நிகழ்வு என்று சீப்பெங் வானிலை ஆய்வு மையம் கூறியது. இதற்கு போலிச் சூரியன் அல்லது பனிக்கட்டி ஒளிவட்டம் (ice halo) என்று பெயர்கள் உண்டு. வானில் 6000 மீட்டர் உயரத்துக்கு மேல் பனிக்கட்டிகள் உருவாகும் போது அதில் ஊருடுவும் ஒளிச் சிதறல்கள், வானவில் உருவாவது போல் சூரியன்களை உருவாக்குகிறது என்று வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் சாங் சிங் கூறினார்.


மூலம்[தொகு]