உள்ளடக்கத்துக்குச் செல்

சூடானின் ஆயுதத் தொழிற்சாலை மீது குண்டு வீச்சு, இசுரேல் மீது சூடான் குற்றச்சாட்டு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 25, 2012

சூடான்பின் ஆயுதத் தொழிற்சாலை ஒன்றின் மீது இசுரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சூடான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இத்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர், மேலும் ஒருவர் காயமடைந்தார்.


செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தலைநகர் கார்ட்டூமின் தெற்கே யார்மூக் என்ற இடத்தில் உள்ள இராணுவ ஆயுதத் தொழிற்சாலை ஒன்றின் ம்கீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


"இதற்கான பதில் தாக்குதல் நகழ்த்தும் நேரததையும் இடத்தையும் நாம் தீர்மானிப்போம்," என சூடானின் தகவல்துறை அமைச்சர் அகமது உஸ்மான் செய்தியாளர்களிடம் கூறினார். நான்கு விமானங்கள் இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.


இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இசுரேலிய பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், சூடான் "ஒரு மிகவும் பயங்கரவாத நாடு" எனக் கூறினார். ஆனாலும் இத்தாக்குதலில் இசுரேல் சம்பந்தப்பட்டுள்ளதா என வினவிய போது அவர் கருத்துக் கூற மறுத்து விட்டார்.


சூடானுக்கூடாகவே காசாக் கரைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக இசுரேல் நம்புகிறது என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஈரானிய ஆயுதங்களை சூடான் காசாக் கரைக்கு இரகசியமாக வழங்கி வருவதாக மூன்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அரசுத் திணைக்களத்தில் இருந்து வெஅலியிடப்பட்ட செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


2011 ஏப்ரலில் சூடான் துறைமுகத்திற்கு அருகில் வாகனம் ஒன்றின் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலையும் இசுரேலே நடத்தியதாக சூடான் குற்றம் சாட்டியிருந்தது.


மூலம்

[தொகு]