சூடான் அரசுத் தலைவர் பசீர் மீது இரண்டாவது சர்வதேசப் பிடியாணை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 13, 2010


சூடான் அரசுத்தலைவர் ஓமார் அல்-பசீர் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் இரண்டாவது தடவையாக பிடியாணையைப் பிறப்பித்திருக்கிறது. இம்முறை இனப்படுகொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


ஓமார் அல்-பசீர்

போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றங்களுக்காக இவர் மீது முன்னர் வழக்குப் பதிவாகியிருந்தது. இக்குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்திருந்தார்.


கடந்த 2009 மார்ச் மாதத்தில் முதற் தடவையாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் இவர் மீது பிடியாணை பிறப்பித்திருந்தது. ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை.


புதிய குற்றச்சாட்டுகக்ள் குறித்து பசீரின் கட்சி உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "இது அபத்தமானது," என்றார். ஆனால் மேற்கு தார்பூர் பகுதியில் இயங்கும் போராளை அமைப்புகள் இதனைப் பெரும் "வெற்றி"யாக அறிவித்துள்ளனர்.


ஏழாண்டுகளாக இடம்பெற்ற போரில் 300,000 பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு அரசுத்தலைவர் பசீரே பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]