சூடான் விமான விபத்தில் அமைச்சர் உட்பட 31 பேர் உயிரிழப்பு
- 17 பெப்பிரவரி 2025: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 பெப்பிரவரி 2025: சூடானில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு மரணதண்டனை தீர்ப்பு
- 17 பெப்பிரவரி 2025: தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்
- 17 பெப்பிரவரி 2025: சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம்
- 17 பெப்பிரவரி 2025: எல்லைப்பகுதியில் இராணுவமயமற்ற வலயம் ஒன்றை அமைக்க இரு சூடானியத் தலைவர்களும் இணக்கம்
ஞாயிறு, ஆகத்து 19, 2012
சூடானில் இன்று இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டதாக சூடான் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இராணுவத்தினர்,அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட 31 பேர் வரை சென்ற விமானம் நூபா மலைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.
புனித ரமழான் பெருநாள் நிறைவடைந்த ஈத் அல்-பிதுர் கொண்டாட்டத்திற்காக தலைநகர் கார்ட்டூம் இல் இருந்து தெற்கு கோர்டோஃபான் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இவ்விமானம் விபத்துக்குள்ளானது. சூடான் அமைச்சர் காசி அல்-சாதிக் அப்துல் ரகீம், நீதிக் கட்சியின் தலைவர் மக்கி அலி பலாயில் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் முக்கிய புள்ளிகள் ஆவார். மேலும் இரண்டு அமைச்சர்கள் உயிரிழந்ததாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
காலநிலை சீராக இல்லாததால் முதற் தடவை விமானம் தரையிறங்க முடியவில்லை என்றும், இரண்டாம் தடவை தரையிறங்க முற்பட்ட போதே விமானம் மலையில் மோதி வெடித்துள்ளது.
எண்ணெய் வளம் மிக்க தெற்கு கோர்டோஃபான் பகுதி தெற்கு சூடானிய எல்லையில் அமைந்துள்ளது.
மூலம்
[தொகு]- Sudan crash: Minister Ghazi al-Sadiq Abdel Rahim dies, பிபிசி, ஆகத்து 19, 2012
- Sudan plane crash kills up to 31, including minister, ராய்ட்டர்ஸ், ஆகத்து 19, 2012