சூறாவளி 'சாண்டி' தாக்கியதில் நியூயோர்க் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

விக்கிசெய்தி இல் இருந்து

செவ்வாய், அக்டோபர் 30, 2012

சாண்டி என அழைக்கப்படும் மாபெரும் சூறாவளி ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையைத் தாக்கியதில், அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு, மற்றும் மின்தடை ஏற்பட்டுள்ளது. குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.


நியூயோர்க் நகரினுள் வரலாறு காணாத அளவு கடல்நீர் உட்புகுந்துள்ளது. பேருந்து, மற்றும் சாலைப் போக்குவரத்துப் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. கீழ் மான்கட்டன் பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அரசுத்தலைவர் ஒபாமா நியூயோர்க் மாநிலத்தை "முக்கிய அழிவாக" அறிவித்துள்ளார்.


ஏறத்தாழ 50 மில்லியன் மக்கள் சூறாவளி சாண்டியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் மக்களை தமது இருப்பிடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் குறைந்தது ஐந்து மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கையில் தமது தேர்தல் பிரசாரங்களை பராக் ஒபாமாவும், குடியரசு வேட்பாளர் மிட் ரொம்னியும் இடைநிறுத்தியுள்ளனர்.


நியூ ஜெர்சி மாநிலத்தின் அட்லாண்டா நகரில் சூறாவளி சாண்டி உள்ளூர் நேரம் 8 மணியளவில் தரைதட்டியது. 130 கிமீ/மணி வேகத்தில் காற்று வீசியது. அட்லாண்டா நகரத்தின் பெரும் பகுதி நீரில் மூழ்கியுள்ளது.


மூலம்[தொகு]