சென்னை எலியட்ஸ் கடற்கரையில் கப்பல் கரை ஒதுங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 1, 2012

சென்னையில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் நேற்றுப் புதன்கிழமை மாலை சரியாக நேரம் தெரியவில்லை என்றாலும் நான்கு மணிக்கு பிறகு பிரதீபாகாவேரி என்றக் கப்பல் கரை ஒதுங்கியது.


மேலும் பிரதீபா காவேரி என்ற இந்த கப்பல் நிலம் புயலின் தாக்குதலால் கடலிலிருந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கப்பல் கரை ஒதுங்கியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றனர் ஆகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மூழ்கிய கப்பலில் இருந்து பதினைந்து மாலுமிகள் இன்று வியாழக்கிழமை காலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பேரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது. மும்பாயைச் சேர்ந்த பிரதீபா கப்பல் கம்பனிக்கு இக்கப்பல் சொந்தமானது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]