நிலம் புயல் சென்னையை அடைந்தது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், நவம்பர் 1, 2012

நிலம் புயல் தமிழ்நாட்டில் மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால் சென்னை துறைமுகத்தில் உச்சபட்சமான அபாய எச்சரிக்கையாக 8-வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.


உள்ளூர் நேரப்படி நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் புயல் கரையைக் கடந்தது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன், பெருமழையும் பெய்தது. மரங்கள் பல சாய்ந்தன, மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டன. ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கல்பாக்கம் அணுமின் நிலையம் தொடர்ந்து இயங்கி வருகின்றது.


புயல் தாக்குவதற்கு முன்னரேயே ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]