சேரா பாலின் வர்ணனையாளராக பொக்ஸ் செய்திகளில் இணைந்தார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 12, 2010

முன்னாள் அலாஸ்கா ஆளுனர் சேரா பாலின் பொக்ஸ் தொலைக்காட்சியுடன் வர்ணனையாளராக இணைவதாக உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளார். 2008 இல் நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் இவர் குடியரசுக் கட்சி சார்பில் உப சனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டார் எனபதும், பின்னர் ஜுலை 2009 இல் இவர் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகினார் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.


2007 இல் சாரா பாலின்

பொக்ஸ் தொலைக்காட்சி கருத்து தெரிவிக்கையில் பாலின் தனக்கென தனியான ஒரு நிகழ்ச்சியைக் கொண்டிருக்க மாட்டார் ஆயினும் தொலைக்காட்சியில் எழுமாற்றாகத் தோன்றி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவார் என தெரிவித்தனர். இந்த உடன்படிக்கையின் பின் உள்ள சம்பளம் போன்ற நிதி விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


பொக்ஸ் செய்தி நிறுவனத்தில் இணைவதையிட்டுத் தான் பெரும் ஆர்வத்துடன் இருப்பதாக பாலின் அவர்களின் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொக்ஸ் தொலைக்காட்சியும் சாரா பாலின் தம்முடன் இணைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக அறிவித்துள்ளது.

மூலம்[தொகு]