உள்ளடக்கத்துக்குச் செல்

சோமாலியப் போராளிகள் மூன்று நகரங்களைக் கைப்பற்றினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 25, 2010

சோமாலியாவில் கால்குடுட் என்ற பிராந்தியத்தில் உள்ள மூன்று நகரஙகளை ஆலு சுனா என்னும் அரசு சார்புப் போராளிக் குழுவிடம் இருந்து அல்-சபாப் என்ற குழு கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எல் டேர், கலாட், மசகவே என்ற இந்த மூன்று நகரங்களையும் எவ்வித எதிர்ப்பும் இன்றி அல்-சபாப் கைப்பற்றியுள்ளனர். இம்மூன்று நகரங்களும் தலைநகர் மொகதிசுவுக்கான பிரதான பாதையில் அமைந்துள்ளன.


"சோமாலியாவிலிசுலாமைப் பரப்பும் எமது நடவடிக்கைகளுக்கு இந்த ஆலு சுனா போராளிகள் தடையாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்து அல்லாவின் அருளால் இந்த மூன்று நகரங்களையும் மீட்டிருக்கிறோம். அல்லாவின் எதிரிகளிடம் இருந்து முழுப் பிராந்தியத்தையும் கப்பற்றும் வரை நாம் ஓய மாட்டோம்," என அல்-சபாப் போராளிக்குழுவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.


சோமாலியாவின் தெற்குப் பகுதி மற்றும் தலைநகர் மொகதிசு ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளை அல்-சபாப் போராளிக்குழு தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

மூலம்

[தொகு]