சோமாலியாவின் 'அல்-சபாப்' போராளிக் குழுவில் பிளவு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 30, 2013

சோமாலியாவின் முக்கியமான அல்-சபாப் ஆயுதக் குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்குழுவின் மிக முக்கிய தலைவர், சேக் அசன் தாகிர் அவெயிசு, தலைநகர் மொகதிசுவை வந்தடைந்தார்.


அபாடோ என்ற வடக்கு நகரம் ஒன்றில் இருந்து அரசுப் படைகளின் பாதுகாப்பில் இவர் வந்திறங்கியுள்ளார். ஆனாலும், இவர் தானாகவே சரணடைந்தாரா, அல்லது போராளிக் குழுவில் இருந்து விலகினாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.,


உட்கட்சிப் பிளவு ஒன்றை அடுத்தே இவர் அரசுப் படைகளிடம் சரணடைந்ததாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. ஆனாலும், இக்கூற்றை போராளிகள் மறுத்துள்ளனர். கடந்த வாரம் அல்-சபாப் குழுவினரிடையே பலத்த மோதல் இடம்பெற்றதை அடுத்தே அவெய்சு தப்பி வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இம்மோதல்களில் அல்-சபாபின் இரண்டு உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.


அவெய்சு ஒரு தீவிரவாதி என ஐக்கிய நாடுகளும், அமெரிக்காவும் அறிவித்திருந்தன. ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் பதவிக்கு வந்துள்ள புதிய சோமாலிய அரசு அல்-சபாப் போராளிகளின் வசம் உள்ள இடங்களைக் கைப்பற்றுவதற்கு முயன்று வருகிறது.


மூலம்[தொகு]