சோமாலியாவில் அல்-சபாப் போராளிகள் தமது முக்கிய தளத்தை இழந்தனர்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், மார்ச் 27, 2012

சோமாலியாவில் அல்-சபாப் போராளிகளின் முக்கிய தளம் ஒன்றை எத்தியோப்பிய மற்றும் சோமாலிய அரசு சார்புப் படையினர் கைப்பற்றியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எல் பூர் என்ற நகரம் அல்-கைதாவுடன் தொடர்புள்ள அல்-சபாப் போராளிகளின் முக்கிய தளமாகும். ஆனாலும், அரசுப் படைகள் நகரைத் தாக்குவதற்கு முன்னரே போராளிகள் அதனைக் கைவிட்டு வெளியேறியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.


அல்-சபாப் தற்போது பல தெற்குப் பகுதி நகரங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஆனாலும், கென்ய மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியப் படையினரால் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.


கடந்த ஆண்டு இறுதியில் கென்யப் படையினர் தெற்குப் பகுதியினுள் ஊடுருவியுள்ளனர். அதே வேளையில் ஆப்பிரிக்க ஒன்றியப் படையினர் தலைநகர் மொகதிசுவில் இருந்து அல்-சபாப் படையினரை விரட்டியுள்ளனர்.


1991 ஆம் ஆண்டில் இருந்து சோமாலியாவில் ஒரு திரமான அரசாங்கம் அமைக்கப்படவில்லை. ஐநா உதவியுடன் தலைநகர் மொகதிசுவை அரசு தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.


மூலம்[தொகு]

Bookmark-new.svg