உள்ளடக்கத்துக்குச் செல்

சோமாலியா தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 4, 2009

சோமாலியாவின் தலைநகர் மொகடீசுவில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் மூன்று அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். பனாடிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒன்றிலேயே இத்தாகுதல் இடம்பெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


தற்கொலைக் குண்டுதாரி பெண் வேடத்தில் விழா நடைபெறும் இடத்துக்குள் நுழைந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


மாணவர்கள், மருத்துவர்கள் உட்பட 40 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


குண்டுதாரி அல்-கைடாவுடன் தொடர்புடைய "அல்-சபாப்" என்ற தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது. ஆனாலும் எக்குழுவும் இதுவரை இத்தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை.


சோமாலியாவின் கல்வி, உயர்கல்வி, மற்றும் சுகாதார அமைச்சர்களே கொல்லப்பட்டவர்கள் ஆவர்.


செப்டம்பரில் இதே போன்றதொரு தாக்குதலில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அதிகாரிகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு அல்-சபாப் உரிமை கோரியிருந்தது.


மூலம்

[தொகு]