உள்ளடக்கத்துக்குச் செல்

சோமாலிய அரசுப் படைகள் முக்கிய நகரம் ஒன்றைக் கைப்பற்றினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 18, 2010

சோமாலியாவில் கென்ய, எத்தியோப்பிய எல்லையில் அமைந்துள்ள பூலோ ஹாவோ என்ற நகரை அல்-சபாப் போராளிகளிடம் இருந்து அரசுப் படைகள் கைப்பற்றினர். ஐநா ஆதரவுடன் இயங்கும் பலம் குறைந்ததாகக் கருதப்படும் அரசுப் படையினருக்கு இரு ஒரு பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.


சோமாலியா

சோமாலியாவின் தெற்கு, மற்றும் நடுப் பகுதிகளை அல்-சபாப் போராளிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ஆனாலும், அரசு-சார்புப் படையினர் கடந்த சில வாரங்களாக அங்கு தமது ஆதிக்கத்தைப் பலப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.


அரசுப் படையினரின் புதிய தாக்குதல்களை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் ஔஅலில் உள்ள கென்யாவினுள் நுழைந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். புலோ ஹாவோவில் இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள மண்டெரா என்ற கென்ய நகரினுள் இவர்கள் நுழைந்துள்ளனர்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 11 அல்-சபாப் போராளிகளும் ஒரு படை வீரரும் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. அந்நகரத்தின் அனைத்து அரசுக் கட்டடங்களிலும் அல்-சபாபின் கறுப்ப்க் கொடிகள் அகற்றப்பட்டு, சோமாலியாவின் நீல, வெள்ளை தேசியக் கொடிகள் பறப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அகுலு சுன்னா வால் ஜமா என்ற மிதவாத இசுலாமியக் குழு அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இம்மாதம் தலைநகர் மகதிசுவின் பல இடங்களை அல்-சபாபிடம் இருந்து அரசுப் படையினர் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படையின் ஆதரவுடன் கைப்பற்றியுள்ளனர்.


மூலம்

[தொகு]