சோமாலிலாந்து குண்டுவெடிப்பில் நான்கு காவல்துறையினர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 25, 2010

சோமாலியாவின் தன்னாட்சி மாநிலமான சோமாலிலாந்தில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது நான்கு காவல்துறையினர் கொல்லப்பட்டனர். மசூதி ஒன்றில் குண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தானர்.


காவல் நிலையம் ஒன்றுக்கு அருகில் உள்ள உள்ளூர் மசூதி ஒன்றின் முன்னால் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். காவல்நிலையத்தில் இருந்த 4 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.


இக்குண்ட்வெடிப்புக்கு எவரும் இதுவரையில் உரிமை கோரவில்லை. இரு வாரங்களுக்கு முன்னர் ஜனவரி 12 ஆம் நாள் லாஸ் ஆனோட் காவல் நிலையம் மீது கிரனேட் வீசப்பட்டதில் 2 காவல்துறையினர் காயமடைந்தனர்.


ஞாயிறன்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் வழிமறிகப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் லாஸ் அனோட் மருத்துவமனையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.


அல் சபாப் என்ற தீவிரவாதக் குழுவினர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துகின்றனர் என மசூதியின் இமாம் கருத்துத் தெரிவித்தார்.


பொதுத்தேர்தல்களைத் தாமதிப்பது குறித்து சோமாலிலாந்தின் அரசுத் தலைவருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல்நிலை காரணமாக அங்கு மேலும் பல வன்முறைகள் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது.

மூலம்