சோயிப் மாலிக் மீது மோசடி வழக்கு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 5, 2010

பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட அணித் தலைவர் சோயிப் மாலிக் மீது மோசடி வழக்கு இந்தியாவில் பதியப்பட்டுள்ளது.


சோயிப் மாலிக்
சானியா மிர்சா

சோயிப் மாலிக்கிற்கு இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவிற்கும் வருகிற ஏப்ரல் 15 அன்று திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சோயிப் மாலிக் ஏற்கெனவே தன்னைத் திருமணம் செய்துள்ளதாக ஐதராபாதைச் சேர்ந்த ஆயிஷா என்கிற பெண் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதற்கு அத்தாட்சியாக திருமண ஓப்பந்தத்தையும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.


இதனிடையே, சோயிப் மாலிக் தங்களை ஏமாற்றியுள்ளதாகவும், தங்களுக்கு ஐந்து கோடி ரூபாய் மாலிக் தருவதாகக் கூறியதாக ஆயிஷாவின் தந்தை பஞ்சாரா ஹில்ஸில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறை அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது. மேலும் ஐதராபாத்தை விட்டு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.


நேற்று செய்தியாளர்களை சந்தித்த சோயிப் திருமணம் நடந்தது உண்மை என்றாலும் வேறொரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறினார். மேலும் தனது இந்த இக்கட்டான நேரத்தில் சோனியாவே பெரும் ஆறுதலாகவும், ஓத்துழைப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் சட்டப்படி இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவியின் அனுமதி தேவை என்று கூறப்படுகிறது.

மூலம்[தொகு]