டிசம்பர் இசை விழா 2013: சென்னையில் தொடங்கியது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், திசம்பர் 3, 2013

உலகின் மிகப்பெரிய கலை விழாக்களில் ஒன்றான சென்னை டிசம்பர் இசை விழா, சென்னையில் கடந்த ஞாயிறன்று தொடங்கியது. சென்னையின் கலை மன்றங்கள் தனித்தனியாக நடத்தும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஒரு இசைத் திருவிழாவாக டிசம்பர் மாதம் முழுவதும் நடைபெறும். சில மன்றங்களின் நிகழ்ச்சி நிரல், சனவரியிலும் தொடர்கிறது.


பாரத் கலாச்சார், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் போன்ற கலை மன்றங்கள் தமது விழாக்களை மாதத்தின் முதல் நாளிலேயே தொடங்கிவிட்டன. ஜெயா தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் நடக்கும் மார்கழி மகா உத்சவம் எனும் இசை விழாவும் டிசம்பர் 1 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]