உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்லாந்தின் அயூத்தியா நகரில் பாலம் ஒன்று வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 29, 2013

தாய்லாந்தின் மத்திய மாகணமான அயூத்தியாவில் நேற்று ஞாயிறு இரவு தொங்கு பாலம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர், 45 பேர் காயமடைந்தனர்.


தலைநகர் பாங்கொக்கில் இருந்து வடக்கே 90 கிலோமீட்டர் தூரத்தில் பா சாக் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட 31 ஆண்டு பழமையான பாலம் உடைந்து வீழ்ந்தது. இப்பாலத்தை மிதியுந்து ஓட்டுனர்களும், பாதசாரிகளும் பயன்படுத்தி வந்தனர். இது 120 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமானதுமாகும்.


பாலம் உடைந்த போது அதில் 100 பேர் வரை பயணித்துக் கொண்டிருந்ததாகவும், அனைவரும் ஆறினுள் வீசப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பலர் பாலத்தின் சிதைபாடுகளிடையே சிக்குண்டிருப்பதால் இறந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. பாலத்தைத் தாங்கும் கம்பிகள் அறுந்ததாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.


இப்பாலம் ரத்தக்னகோசின் வம்சத்தின் 120வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக 1982 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அயூத்தியா நகரம் பண்டைய அயூத்தியா இராச்சியத்தின் தலைநகராக இருந்தது. இவ்விராச்சியம் கிபி 1351 முதல் 1767 வரை ஆட்சியில் இருந்தது.


மூலம்

[தொகு]