தாய்லாந்தில் கண்ணிவெடியில் சிக்கி எட்டுப் படையினர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 29, 2013

தாய்லாந்தின் தெற்கே யால மாகாணத்தில் குரொங் பினாங் மாவட்டத்தில் வீதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்று வெடித்ததில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டனர்.


இராணுவ அணியொன்றை இலக்கு வைத்து இக்குண்டு வெடிக்கப்பட்டது. இராணுவ பாரவுந்து ஒன்று முற்றாக சேதமடைந்ததுள்ளதாகக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். இரண்டு பேர் காயமடைந்தனர். பொதுமக்கள் இருவரும் காயமடைந்தனர். அண்மைக்காலங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் இதுவே மிகப் பெரியது எனக் கூறப்படுகிறது.


பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்தில், யால, பட்டாணி, நரதிவாத் ஆகிய மூன்று தெற்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 2004 ஆம் ஆண்டில் வாழும் இப்பகுதியில் இசுலாமியத் தீவிரவாதம் தலை தூக்கியதை அடுத்து இதுவரை அங்கு 5,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அரசு போராளிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தாலும், இவ்வாறான சம்பவங்கள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன. முஸ்லிம்களுக்கு அதிக சுயாட்சி வழங்கப்பட வேண்டும் எனப் போராளிகள் கோரி வருகின்றனர்.


மூலம்[தொகு]