உள்ளடக்கத்துக்குச் செல்

தார்பூர் தாக்குதலில் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஐநா அமைதிப்படை வீரர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 14, 2012

சூடானின் தார்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு தாக்குதலில் அங்கு பணியாற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய-ஐக்கிய நாடுகள் கூட்டு அமைதிப் படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக ஐநா அதிகாரிகள் தெரிவித்தனர்.


உயிரிழந்த அமைதிப்படை வீரர் 40 வயதுள்ள அஜ்கார் அலி என்னும் வங்காளதேச நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வங்காளதேசப் பத்திரிகை டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.


"உள்ளூர் இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றின் காவல்துறை அலுவலகத்தைச் சுற்றிவளைத்த ஆயுததாரிகள் காவல்துறையினர் மீது சுட்டதில் இவர் உயிரிழந்தார்," ஐநா நிறுவனம் அறிவித்துள்ளது.


தெற்கு தார்பூரின் தலைநகர் நியாலாவில் இடம்பெற்ற வேறொரு தாக்குதலில் ஆப்பிரிக்க ஒன்றிய-ஐக்கிய நாடுகள் கூட்டு அமைதிப் படையைச் சேர்ந்த வேறொருவர் காயமடைந்தார்.


மூலம்

[தொகு]