உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கோவிலில் 15 வயது மாணவன் காணமால் போயுள்ளார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 8, 2011

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள விநாயகபுரத்தை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த சனவரி 2ம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் திருக்கோவில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


தம்பிலுவில் மத்தியமகா வித்தியாலயத்தில் பயிலும் வினாயகபுரம் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 2ம் திகதி மாரை 3.30 மணிக்கு பாடசாலையை துப்பரவு செய்ய என வீட்டைவிட்டு சென்றவர் வீடு திரும்பாததையடுத்து 4ம் திகதி தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


இதற்கிடையில் மன்னாரில் கடந்த வியாழனன்று மாலை 6.45 மணியளவில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரினால் 4 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]