உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பரங்குன்றம் பகுதியில் வைகோ திடீர் பிரசாரம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 22, 2013

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று (21.11.2013) திருப்பரங்குன்றம் பகுதியில் தேர்தலுக்காக ஆதரவு திரட்டினார்.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம்,ஹர்விபட்டி, அவனியாபுரம், பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு ஆதரவு தரும்படி கோரி உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பே திட்டமிட்டு முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வைகோ சந்தித்து உள்ளார். கட்சியின் முக்கிய உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்குமே வைகோ வந்து சென்றதே தெரியாதபடி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. குறிப்பாக அவர் வந்து சென்ற காரில் கட்சி கொடி கூட இல்லை. அவர் சாதாரன நபர் போல வந்து சென்றுள்ளார். இது மற்ற அரசியல் கட்சி வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

மாநில கொள்கைபரப்பு செயலாளர் அழகுசுந்தரம் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வீரத்தமிழ்செல்வன், மதுரை மாவட்ட செயலாளர் பூமிநாதன், திருப்பரங்குன்றம் நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


மூலம்[தொகு]