தெற்கு சூடான் மீது சூடான் வான்தாக்குதல் நடத்தியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 12, 2012

கடந்த புதன்கிழமை அன்று ஹெக்லிக் எண்ணெய் அகழ்வுப் பகுதியை தெற்கு சூடான் இராணுவத்தினர் கைப்பற்றியதை அடுத்து தெற்கு சூடானின் யுனிட்டி மாநிலத்தின் மீது சூடான் வான்தாக்குதலை ஆரம்பித்துள்ளது. கடந்த சூலையில் தெற்கு சூடான் விடுதலை பெற்றதில் இருந்து அங்கு முதன் முதலாகத் தீவிரமான போர் நடந்து வருகிறது.


சூடானுடனான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியான ஹெக்லிக் எண்ணெய் பகுதியில் இருந்து தமது படைகளைத் திரும்பப் பெறப்போவதில்லை என தெற்கு சூடானின் அரசுத்தலைவர் சல்வா கீர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். படைகளைத் திரும்பப் பெறுமாறு தெற்கு சூடானை ஐக்கிய நாடுகளும், ஆப்பிரிக்க ஒன்றியமும் முன்னதாகக் கேட்டிருந்தன.


சூடானின் எண்ணெய் உற்பத்தியின் அரைவாசிப் பகுதி ஹெக்லிக் நகரில் இருந்தே பெறப்படுகின்றன. இப்பகுதி சூடானுக்குச் சொந்தமானது என பன்னாட்டுச் சமூகம் அங்கீகரித்துள்ளது, ஆனாலும், தெற்கு சூடான் இதற்கு இணங்க மறுத்து வருகின்றது.


யுனிட்டி மாநிலத்தில் சூடான் மொத்தம் ஐந்து குண்டுகளை வீசியது. இத்தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்தனர்.


மூலம்[தொகு]

[[பகுப்பு:தெற்கு சூடான்]