தெலங்கானா மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, திசம்பர் 27, 2015

இந்தியாவின் 29-ஆவது மாநிலமான தெலுங்கானாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மகா சண்டி யாகம் நடைபெற்ற யாக சாலையில் லேசான தீ விபத்து ஏற்பட்டது, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் எர்ரபல்லி எனும் பகுதியில், அம்மாநில முதல்வர் கே. சந்திராசேகர ராவ் பண்ணை நிலத்தில் உலக அமைதி வேண்டி, தனது சொந்த பணம் 2௦ கோடி செலவு செய்து மகா சண்டியாகத்தை நடத்தியாக தெரிகிறது.


இந்நிலையில், இறுதிநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாண்டியாக பந்தலில் திடிரென தீ பிடித்துகொண்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அனணத்தாக அறியபடுகிறது.


பந்தலில் தீ பற்றியவுடன் மக்கள் நான்கு பக்கமும் சிதறியோடினர், காவலர்கள் சாதுர்யமாக அனைத்து தடுப்புகளையும் திறந்துவிட்டு கூட்ட நெரிசலை தவிர்த்தனர். இறுதி சிறப்பு பூசையில் (இன்று) இந்திய நாட்டின் குடியரசு தலைவர் பிராணப் முகர்ஜி கலந்து கொள்வதாக இருந்தார்.


மூலம்[தொகு]