நசர்பாயெவ் கசக்ஸ்தானின் அரசுத்தலைவராக மீண்டும் தெரிவு
- 17 பெப்ரவரி 2025: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 17 பெப்ரவரி 2025: உருசியாவின் 'புரோட்டோன்-எம்' ஆளில்லா ஏவூர்தி கசக்ஸ்தானில் வீழ்ந்தது
- 17 பெப்ரவரி 2025: நவீன ரக செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற உருசிய புரோட்டோன்-எம் ஏவூர்தி வானில் வெடித்தது
- 17 பெப்ரவரி 2025: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது
- 17 பெப்ரவரி 2025: நசர்பாயெவ் கசக்ஸ்தானின் அரசுத்தலைவராக மீண்டும் தெரிவு
திங்கள், ஏப்ரல் 4, 2011
மத்திய ஆசிய நாடான கசக்ஸ்தானில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் தற்போதைய தலைவர் நுர்சுல்தான் நசர்பாயெவ் 95.5% வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றி பெற்றிருக்கிறார். தனது "பொருளாதார, அரசியல், மற்றும் சமூக சீர்திருத்தங்களைத்" தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்போவதாக 70 வயதான நசர்பாயெவ் தெரிவித்தார்.

எனினும், நடந்து முடிந்த தேர்தல் பன்னாட்டு சனநாயகக் கோட்பாடுகளுக்கு அமைய இடம்பெறவில்லை என பன்னாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். போட்டியின்மை, ஊடக சுதந்திரம் இல்லாமை போன்றவை காணப்பட்டதாக அவரக்ள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு ஆயத்தமாகத் தமக்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனாலும், எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்துள்ளதாக அரசு ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான நசர்பாயெவ் 2007 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்திய அரசியலமைப்பு மாற்றத்தின் படி, ஒருவர் எத்தனை தடவையும் அரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம். இவரது தற்போதைய பதவிக்காலம் 2012 ஆம் ஆண்டு முடிவடைகிறது. ஆனாலும், அவர் தேர்தலை முன்கூட்டியே அறிவித்திருந்தார். 9 மில்லியன் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 90% வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்திருந்தனர். 2005 தேர்தலில் நசர்பாயெவ் 91.2% வாக்குகளைப் பெற்றிருந்தார்.
மூலம்
[தொகு]- Kazakhstan President Nazarbayev wins re-election, பிபிசி, ஏப்ரல் 4, 2011
- Nazarbayev wins Kazakh presidential poll, அல்ஜசீரா, ஏப்ரல் 4, 2011