உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரியாவில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 8, 2012

வடக்கு நைஜீரியாவில் கடூனா நகரில் இடம்பெற்ற இரண்டு வாகனக் குண்டுவெடிப்புகளில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர். நகரின் மத்திய பகுதியில் தேவாலயம் ஒன்றுக்கு அருகில் இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. பல கட்டடங்கள் சேதமுற்றுள்ளன.


கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் மதச் சார்பு வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு திருநாளையொட்டி இங்கு வன்முறைகள் இடம்பெறலாம் என ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.


இத்தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை, ஆனாலும், போக்கோ ஹராம் என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழுவினர் உயிர்த்த ஞாயிறன்று தாம் தாக்குதல் நடத்தவிருப்பதாகக் கூறியிருந்தது.


மூலம்[தொகு]