உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரியாவில் சந்தையில் சுமையுந்து ஒன்று மோதியதில் 100 பேருக்கு மேல் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 21, 2009


நைஜீரியாவில் கோகி மாநிலத்தில் மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தை ஒன்றில் சுமையுந்து ஒன்று மோதியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


சுமையுந்து மலை ஒன்றில் கட்டுக்கடங்காத வேகத்துடன் கீழிறங்கிய போது தரையில் இருந்த வாகனங்களின் மீது மோதி பின்னர் அருகில் இருந்த சந்தை ஒன்றில் நுழைந்தது. இவ்விபத்தில் மேலும் 40 பேர் படுகாயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


வாகனங்களும், போக்குவரத்துப் பாதைகளும் சீராகப் பராமரிக்கப்படாத காரணத்தினால் நைஜீரியாவில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி இடம்பெறுவதுண்டு.


"55 பேர் மட்டுமே இறந்துள்ளதை இப்போதைக்கு என்னால் உறுதிப்படுத்த முடியும். வாகனச் சாரதி கட்டுப்பாட்டை இழந்து பொது மக்கள் கூடியிருந்த இடத்தில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார்," என காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்தார். பல வாகனக்கள் தீக்கிரையாகியுள்ளன.


கோகி மாநிலத்தில் மூன்று நாட்களைத் துக்க நாட்களாக அம்மாநில ஆளுநர் இப்ராகிம் ஐடிரிஸ் அறிவித்துள்ளார்.


சென்ற வாரம், ஓயோ மாநிலத்தில் பேருந்து ஒன்று சுமையுந்து ஒன்றுடன் மோதியதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம்

[தொகு]