உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரியா குண்டுத் தாக்குதலில் 63 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 5, 2011

நைஜீரியாவின் வடகிழக்கில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.


இத்தாக்குதல்கள் குறிப்பாக கிறித்தவக் கோயில்களையும் யோப் மாநிலக் காவதுறையினரையும் இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து பொதுமக்கள் பலர் நகரை விட்டு வெளியேறியுள்ளனர்.


மைடுகூரி என்ற நகரில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதல்களை போக்கோ ஹராம் என்ற இசுலாமியக் குழுவே மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு தாக்குதல்கள் ஆரம்பமானதாகவும் 90 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் நேரில் கண்டவர்கள் கூறினர். கிறித்தவக் கோயில்கள் மீது குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டன. 10 கோயில்கள் வரை தீக்கிரையாகின.


மூலம்[தொகு]