உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரிய தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 500 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 25, 2011

நைஜீரிய அரசுத்தலைவர் தேர்தலுக்குப்பின் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 500 பேர் உயிரிழத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நைஜீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் குட்லக் ஜொனத்தன் பெரும்பான்மை வாக்கு பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ சர்வாதிகாரி முகமுது புகாரி தோல்வி அடைந்தார். இதையடுத்து ஜொனத்தனின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததால்தான் ஜொனத்தன் வெற்றி பெற்றதாகக் கூறி, புகாரி ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியதில் வன்முறை வெடித்தது. அதில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளன. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.


நைஜீரியாவில் வடக்கு பகுதி, தெற்குப் பகுதி என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் இசுலாமியர்களும், தெற்கு பகுதியில் கிறித்தவர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். தெற்குப் பகுதியைக் காட்டிலும் வடக்கு பகுதி பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் பின்தங்கியிருப்பது மக்களிடையே வெறுப்பை அதிகரித்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]