நோர்வே தேர்தலில் பழமைவாத வலதுசாரிகள் வெற்றி
- 17 பெப்பிரவரி 2025: நோர்வேயின் கார்ல்சன் புதிய உலக சதுரங்க வாகையாளர், விசுவநாதன் ஆனந்த் தோல்வி
- 17 பெப்பிரவரி 2025: 2013 உலக சதுரங்கப் போட்டித் தொடர் சென்னையில் தொடங்கியது, ஆனந்தும் கார்ல்சனும் மோதுகின்றனர்
- 17 பெப்பிரவரி 2025: நோர்வே தேர்தலில் பழமைவாத வலதுசாரிகள் வெற்றி
- 17 பெப்பிரவரி 2025: நோர்வே தீவிரவாதத் தாக்குதல்: கொலையாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை
- 17 பெப்பிரவரி 2025: எட்வர்ட் மண்ச்சின் 'அலறல்' ஓவியம் 120 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை
செவ்வாய், செப்டெம்பர் 10, 2013
நோர்வேயில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி தோல்வியை ஒப்புக் கொண்டதை அடுத்து பழமைவாதக் கட்சியின் தலைவர் எர்னா சோல்பேர்க் புதிய அரசை அமைக்கவிருக்கிறார். இவர் குடியேற்றத்திற்கு எதிரான முன்னேற்றக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
75 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 169 நாடாளுமன்ற இடங்களில் நான்கு வலதுசாரிக் கட்சிகள் கூட்டாக 96 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
52 வயதான சோல்பர்க், நோர்வேயின் இரண்டாவது பெண் பிரதமராகப் பதவி ஏற்பார். அத்துடன் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவரே முதலாவது கன்சர்வேட்டிவ் பிரதமரும் ஆவார்.
தலைநகர் ஒஸ்லோவில் 2011 சூலை மாதத்தில் ஆளும் தொழிற்கட்சியின் இளைஞர் முகாம் ஒன்றில் வலதுசாரித் தீவிரவாதி நடத்திய குண்டுத்தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டதற்குப் பின்னர் நாட்டில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் இதுவாகும்.
மூலம்
[தொகு]- Norway election: Conservative Erna Solberg triumphs, பிபிசி, செப்டம்பர் 10, 2013
- Centre-right bloc takes power in Norway, நியூசிலாந்து எரால்டு, செப்டம்பர் 10, 2013