உள்ளடக்கத்துக்குச் செல்

பப்புவா நியூ கினியில் விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 28 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 14, 2011

பப்புவா நியூ கினியின் வடக்குப் பகுதியில் சிறிய ரகப் பயணிகள் ஒன்று இன்று வீழ்ந்து நொறுங்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர், நால்வர் மட்டும் உயிர் தப்பினர்.


ஆத்திரேலியா, மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த இரண்டு விமானிகள் உயிர் தப்பியவர்களில் அடங்குவர் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.


பிஎன்ஜி டாஷ்-6 என்ற விமானம் லாய் என்ற இடத்தில் இருந்து மடாங் நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் மடாங் இலிருந்து 20 கிமீ தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வீழ்ந்தது. நிவாரணப் பணியாளர்களும், பாதுகாப்புத் துறையினரும் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளனர். சீரற்ற காலநிலையே விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், விசாரணைகளைத் தொடர்ந்து வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இறந்தவர்கள் அனைவரும் பப்புவா நியூ கினி மக்கள் ஆவர். மடாங் பல்கலைக்கழகத்தில் தமது பிள்ளைகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த பெற்றோர்களே கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் எனக் கூறப்படுகிறது.


உள்ளூரில் வசிக்கும் மக்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு உதவிக்கு விரைந்ததாகவும் காயமடைந்தவர்களை வெளியே அவர்கள் உதவியதாகவும் ஆத்திரேலியத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


2000 ஆம் ஆண்டில் இருந்து 20 இற்கும் அதிகமான விமானங்கள் பப்புவா நியூ கினியில் விபத்துக்குள்ளாகியுள்ளன.


மூலம்[தொகு]