உள்ளடக்கத்துக்குச் செல்

பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 18, 2012

பப்புவா நியூ கினியின் தூரக்கடல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


லாயி என்ற கரையோர நகரில் இருந்து 137 கிலோமீட்டர் வடக்கே 202 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் தெற்குக் கரையில் உள்ள தலைநகர் போர்ட் மோர்ஸ்பி வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பப்புவா நியூ கினி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலநடுக்கத்தினால் சேதங்களஓ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை, அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.


பப்புவா நியூ கினி நிலவியல் ரீதியில் சுறுசுறுப்பான பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதுண்டு. ஆனாலும், பெரும்பாலான மக்கள் அங்கு நெகிழ்வுத்தன்மையும் இலேசானதுமான வீடுகளில் வாழ்வதால், நிலநடுக்கங்களால் பெருமளவு சேதம் ஏற்படுவதில்லை.


1998 ஆம் ஆண்டில் வடக்குக் கரையில் இடம்பெற்ற 7.0 அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர், அதையடுத்து ஏற்பட்ட சுனாமியால் பெருமளவு சேதம் ஏற்பட்டது.


மூலம்

[தொகு]