பப்புவா நியூ கினியில் 7.3 அளவு நிலநடுக்கம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், திசம்பர் 15, 2011

தெற்குப் பசிபிக் நாடான பப்புவா நியூ கினியின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் 7.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. து. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


பப்புவா நியூ கினியின் லாய் என்ற இரண்டாவது பெரிய நகரத்தில் இருந்து 89 கிமீ தூரத்தில் 121 கிமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.


இதனால் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 3 நிமிடங்கள் தொடர்ந்த நிலநடுக்கம் மிகவும் பெரிய அளவில் இருந்ததாகவும் சில கட்டடங்களின் சுவர்கள் மட்டும் லேசான பாதிப்படைந்ததாகவும், நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளிலிருந்து வீதிகளுக்கு ஓடிவந்ததாகவும் உள்ளூர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் போர்ட் மோர்ஸ்பியை சேர்ந்த மக்களும், இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மூலம்[தொகு]

Bookmark-new.svg