உள்ளடக்கத்துக்குச் செல்

பயணிகளுக்கு பலன் இல்லாத "ஆட்டோ பே'

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 22, 2013

மதுரை மாட்டுத்தாவணியில், பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "ஆட்டோ பே" திட்டத்தில், முறையான கட்டண நிர்ணயம் செய்யாததால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணிக்கு வரும் பயணிகளுக்காக மதுரை மாநகராட்சியினால், "ஆட்டோ பே" என்ற திட்டம் நேற்று முன்தினம் (20.11.2013) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்டோ ஓட்டுனர்களால் அவசரமாக நிர்ணயிக்கப்பட்ட "உத்தேச' கட்டணம், தற்போதைய கட்டணத்தை விட அதிகம் இருப்பதாக, பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் தான், திட்டத்தில் முதல் நாள் இணைந்திருந்த ஆட்டோக்களின் எண்ணிக்கை, நேற்று அதிகரித்தது. ஆனால் 450 ஆட்டோக்கள் இத்திட்டத்தில் இணையவில்லை. நியாயமான கட்டணத்தில் பயணிகள் செல்ல, தொடங்கப்பட்டத் திட்டம், தற்போது பாதை மாறி செல்வது, ஏமாற்றத்தை அளித்துள்ளது. இங்கு, ஆட்டோ கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யவில்லை; ஆட்டோக்காரர்களே நிர்ணயித்துள்ளனர். இதனால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்


மூலம்

[தொகு]