பிலிப்பைன்சில் இசுலாமியத் தீவிரவாதிகள் சிறை உடைப்பு, 31 கைதிகள் விடுவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 13, 2009

இசுலாமியத் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலர் இன்று தெற்கு பிலிப்பைன்சில் சிறை ஒன்றைத் தாக்கி 31 கைதிகளை விடுவித்திருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


சிறை உடைப்பின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது சிறைக் காவலாளி உடப்ட 2 பேர் கொல்லப்பட்டனர்.


துப்பாக்கிதாரிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமது சகாக்களை விடுவிக்கும் பொருட்டே இத்தாக்குதலை மேற்கொண்டதாக பசிலான் தீவின் உதவி ஆளுநர் அல் பசீத் சகலாகுல் தெரிவித்தார்.


ஞாயிறன்று அதிகாலையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் தப்பியிருப்பதாக அவர் தெரிவித்தார்.


சென்ற ஆண்டில் அபு சயாஃப் தீவிரவாதிகள் மூவர் சிறையில் இருந்து தப்பியிருந்தனர். 2007 இல் இடம்பெற்ற சிறை உடைப்பில் 16 பேர் தப்பியிருந்தனர்.

மூலம்[தொகு]