பிலிப்பைன்சில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், நவம்பர் 24, 2009


பிலிப்பைன்சின் தென்பகுதித் தீவான மின்டனோவாவில், ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களை படையினர் மீட்டுள்ளனர். அவற்றில் சில சடலங்களில் அவயவங்கள் சிதைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 39 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


இதனையடுத்து மிண்டனோவா தீவில் இரண்டு மாகாணங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மகுந்தனாவோ மாகாணத்தில் உள்ள அரசியல் குடும்பங்களுக்கு இடையிலான சாதிச்சண்டையாக இது இருக்கலாம் என்று ஒரு பேச்சாளர் கூறுகிறார்.


அடுத்த ஆண்டு நடக்கவிருந்த ஆளுநருக்கான தேர்தலில், தனது கணவரின் வேட்பு மனுவை தாக்கல் செய்யவிருந்த ஒரு பெண்ணும் அவரது ஏனைய குடும்பத்தினரும், சட்டத்தரணிகளும், செய்தியயாளர்களும் கூட கொல்லப்பட்டுள்ளனர்.


இந்தக் கொலைகளை கொடூரமானவை என்று வர்ணித்திருக்கின்ற பிலிப்பைன்ஸ் அரசாங்கம், இதனால், தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், உரிய நீதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மூலம்[தொகு]