பெல்ஜியத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 18 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 16, 2010


பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சின் புறநகர்ப் பகுதியில் நடந்த தொடருந்து விபத்து ஒன்றில் குறைந்தது பதினெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


நேற்று திங்கட்கிழமை காலை எதிரெதிர்த் திசைகளில் வந்த இரண்டு பயணிகள் தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், அவற்றின் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு, மேலே சென்ற மின் கம்பிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. 150 பேர் காயமடைந்தனர். இவர்களில் 55 பேர் கடும் காயமுற்றனர்.


சமிக்ஞை எதையும் கவனிக்காது ஒரு தொடருந்து கடந்து சென்றிருக்கலாம் என்று தெரிவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


இந்த விபத்து காரணமாக ஐரோப்பாவின் வட மேற்கு பாகத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.


பிரசல்ஸ்-பாரிஸ் இடையிலான அதிவேக தொடருந்து சேவைகளும், லண்டனுக்கான யூரோஸ்டார் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மூலம்